மெட்ரோ பழுது பார்க்கும் பணிகளில் உதவும் "ரோபோ நாய்"..! - Seithipunal
Seithipunal


ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசின் நூறு ஆண்டுகள் பழமையான பாரிஸ் மெட்ரோவை பழுதுபார்ப்பதற்காக நாய் போன்று நான்கு கால்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோ புதிதாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெர்சிவல் என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த ரோபோ நாய் பிரபல பாஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

40 கிலோ எடையும், 3.2 அடி உயரமும் கொண்ட இந்த ரோபோ 360 டிகிரி உயர்தர அகச்சிவப்பு கேமராக்களுடன், ஸ்கேனிங் வசதிகளும், ரயில்வே தளவாடங்களில் சிறு குறைபாடுகளையும் நீக்கும் தன்னிச்சையான கருவிகளையும் உள்ளடக்கியுள்ளது.

இதுதொடர்பாக பாரிஸ் மெட்ரோ உள்கட்டமைப்பு ஆய்வாளர் வில்லியம் நிப்செரான் கூறும் பொழுது, கடினமான பகுதிகளுக்கும், குறுகிய பகுதிகளுக்கும் எளிதாக சென்று பழுது பார்க்க இந்த ரோபோ நாய் உதவுவதாகவும், ரோபோவின் உதவியால் அதிகாரிகளின் வேலை சுமை பெரிதும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மாதத்திற்கு இரண்டு முறை இந்த ரோபோவை பயன்படுத்துவதாகவும், மிக நீண்ட பாரிஸ் மெட்ரோ நெட்வொர்க்கின் பராமரிப்பு குழுவிற்கு பெரும் உதவியாக ரோபோ செயல் பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Robot dog helps in repair works in paris metro


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->