நேட்டோ அமைப்புதான் உலகம் முழுவதும் பிரச்சினைகளை உருவாக்குகிறது.! சீனா, ரஷ்யா குற்றசாட்டு.! - Seithipunal
Seithipunal


நேட்டோ அமைப்புதான் உலகம் முழுவதும் பிரச்சினைகளை உருவாக்குகிறது என்று சீனா மற்றும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையான நான்கு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ அமைப்பின் செயல்பாடு காரணமாக பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நேட்டோ அமைப்பில் இணைய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்நிலையில் நேட்டோ உச்சி மாநாட்டில்,  நேட்டோ நாடுகளுக்கு ரஷ்யா பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும், உலக ஸ்திரத்தன்மைக்கு சீனா கடும் சவால்களை முன்வைக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நேட்டோதான் உலகம் முழுவதும் பிரச்சினைகளை உருவாக்குகிறது என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் எந்த பிரதேசத்தில் இருந்து அச்சுறுத்தல்கள் உருவாக்கப்படுகிறதோ, அதே அச்சுறுத்தல்களை நாங்களும் உருவாக்குவோம் என்று ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நிலையில் ரஷ்யா அதிபர் புடினின் அச்சுறுத்தல்கள் புதிது இல்லை என எஸ்டோனிய பிரதமர் காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia and China have accused the nato creating the problem


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->