உக்ரைனில் பணிபுரியும் ரஷ்ய வீரர்களுக்கு வருமான வரி விலக்கு - ரஷ்யா அறிவிப்பு
Russia announces tax exemption for Russian working in ukraine
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த 10 மாதங்களுக்கும் மேல் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா இரண்டாம் கட்ட தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது.
போரில் உக்ரைனிடமிருந்து கைப்பற்றப்பட்ட டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஷியா உள்ளிட்ட பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. மேலும் ரஷ்யாவுடன் இணைத்த உக்ரைன் பகுதிகளை நிர்வகிப்பது மிகவும் சிக்கலாக இருந்து வருகிறது என்று அதிபர் புதின் தெரிவித்தார்.
இந்நிலையில் உக்ரைன் போரில் பங்கேற்கவும், ரஷ்யா உடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றவற்கு வீரர்களை ஊக்குவிக்கும் முயற்சிகளை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. இதற்காக ரஷ்ய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா பகுதிகளில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், ராணுவ வீரர்கள், காவலர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு வருமான வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Russia announces tax exemption for Russian working in ukraine