அடுத்தடுத்து உக்ரைன் மீது ரஷ்ய படைகள் குண்டுமழை தாக்குதல்.!
russia attack on the ukrainian
உக்ரைன் மீது போர் தொடுக்கும் படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று காலை உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த பல வருடங்களாக மோதல் அதிகரித்துக் கொண்டே வந்தது. அதிலும் கடந்த 25 வருடங்களில் மோதல் புதிய விஸ்வரூபம் எடுத்தது.
இந்நிலையில் தான் ரஷ்யா - உக்ரைன் மோதல் என்பது நேரடியாக உருவெடுத்துள்ளது. இன்று காலை உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று உக்ரைன் உள்ளே சென்று ரஷ்யா தாக்குதல் நடத்த உள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்புகுந்து ராணுவ நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
கிழக்கு உக்ரைன் பகுதியில் ஏற்கனவே அரசுக்கு எதிராக புரட்சி படைக்க உள்ளது. இந்த படைகளுக்கு பல வருடங்களாக ரஷ்ய ராணுவ உதவிகளை செய்து வருகிறது. உக்ரைன் அமெரிக்காவுடன் நெருக்கும் ஆனதிலிருந்து ரஷ்யா இந்த படைகளுக்கு உதவியை செய்து வருகிறது.
இந்நிலையில், ரஷ்யா உக்ரைனில் வான்வெளி தாக்குதல், ராணுவ தாக்குதல் என இரண்டையும் நடத்த முடிவு செய்துள்ளது. இதனால், அங்கு பெரிய சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று அதிகாலை தாக்குதல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் புதின் இன்று அதிகாலை உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின் உத்தரவை தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கியூ மீது ரஷ்ய படைகள் குண்டு மழை தாக்குதல் நடத்தி உள்ளது. மேலும், உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால், உக்ரைனில் பதட்டம் நிலவுகிறது.
English Summary
russia attack on the ukrainian