உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல்.. பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்.!! - Seithipunal
Seithipunal


இன்று காலை உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று உக்ரைன் உள்ளே சென்று ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்புகுந்து ராணுவ நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். 

ரஷ்யா உக்ரைனில் வான்வெளி தாக்குதல், ராணுவ தாக்குதல் என இரண்டையும் நடத்த முடிவு செய்துள்ளது. இதனால், அங்கு பெரிய சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று அதிகாலை தாக்குதல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் புதின் இன்று அதிகாலை உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் புதின் உத்தரவை தொடர்ந்து,  உக்ரைன் தலைநகர் கியூ மீது ரஷ்ய படைகள் குண்டு மழை தாக்குதல் நடத்தி உள்ளது. மேலும், உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால், உக்ரைனில் பதட்டம் நிலவுகிறது.

இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எதிரொலியாக கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 100 டாலரை தாண்டியது.  மேலும், கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் இந்திய பங்கு சந்தையில் கடும் சரிவை சந்தித்துள்ளது.  சென்செக்ஸ் ஆயிரத்து 428 புள்ளிகள் சரிந்துள்ளது.தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 413 புள்ளிகள் சரிந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

russia attack to ukrainian petrol price may be risk


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->