ரஷ்ய தாக்குதலால் சேதமடைந்த உக்ரைனின் அணு மின் நிலையம்.!
Russia attacks Zaporizhzhia atomic power plant in Ukraine
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் பிப்ரவரி கடந்த 24ந்தேதி தொடங்கி 5 மாதங்களையும் கடந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனின் முக்கிய பகுதிகளை ரஷியா கைப்பற்றி ஆக்கிரமித்து வருகிறது.
இந்நிலையில் போர் தொடங்கியதிலிருந்தே சபோரிஸ்ஷியா அணு மின் நிலையத்தை ரஷ்யப்படைகள் ஆக்கிரமித்துள்ளதால், அணு மின் நிலையத்தின் மீது ரஷ்யா பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து அணுமின் நிலையத்தின் மீதான தாக்குதலில் ஏற்பட்ட சேதத்தினால் அணு உலைகளில் ஒன்று மூடப்பட்டுள்ளது.
மேலும் அணுமின் நிலையத்தில் மின்கம்பி உடைந்து ஹைட்ரஜன் மற்றும் கதிரியக்க பொருட்கள் கசிவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், தீ மற்றும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் உலகில் முதன்முதலாக ரஷ்ய பயங்கரவாதிகள் மின் உற்பத்தி நிலையத்தை பயங்கரவாதத்திற்காக பயன்படுத்தினார்கள் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
English Summary
Russia attacks Zaporizhzhia atomic power plant in Ukraine