கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்தால் கடும் விளைவுகள் ஏற்படும்! ரஷ்ய துணை பிரதமர் எச்சரிக்கை.!
Russia crude oil ban
கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு தடை விதிப்பது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் காரணமாக கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் பீப்பாய்க்கு 300 டாலராக அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவோக் பேசுகையில், ரஷ்ய எண்ணெய்யை விரைவாக மாற்றுவது சாத்தியமில்லாதது என்றும், அப்படி மாற்றப்பட்டால் ஐரோப்பிய மக்கள் அதிக விலை கொடுக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.