ரஷ்ய படைகள் உக்ரைன் ஆயுதக்கடங்கின் மீது ஏவுகணை தாக்குதல்.! நேட்டோவால் வழங்கப்பட்ட 45000 டன் வெடிமருந்து அழிப்பு - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் 5 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது .நாளுக்கு நாள் தீவிரமடையும் போரில் ரஷ்யாவின் மும்முனை தாக்குதலால் உக்ரைனின் கிழக்கு மாகாணத்தின் முக்கியமான நகரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உக்ரைனின் தெற்கு நகரான மிகோலெய்வ் மீது ரஷ்ய படைகள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த தாக்குதலில் உக்ரைனின் மிகோலெய்வ் பகுதியில் உள்ள ஆயுதக் கிடங்கில் ரஷ்ய படைகளால் உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பால் வழங்கப்பட்ட 45000 டன் வெடி மருந்தை ஏவுகணை மூலம் அழித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதையடுத்து டோன்ட்ஸ்க் பகுதியில் உள்ள ராணுவ அமைப்புகளின் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

மேலும் போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனுக்கு சொந்தமான 263 போர் விமானங்கள், 3000க்கும் மேற்பட்ட சிறிய பீரங்கிகள், 4000க்கும் மேற்பட்ட பெரிய பீரங்கிகள் அழிக்கப்பட்டுள்ளன என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia destroyed 45000 ton explosives given by NATO


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->