உக்ரைன் தேடப்படும் பட்டியலில் ரஷ்ய முன்னாள் அதிபர்..! வெளியான அதிர்ச்சி செய்தி.! - Seithipunal
Seithipunal


ரஷியா நாட்டின் முன்னாள் அதிபராக 2008 ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் டிமிட்ரி மெத்வதேவ். ஆனால், தற்போது அவர் ரஷிய பாதுகாப்பு துறையின் துணை தலைவராக இருந்து வருகிறார். 

இந்நிலையில், ரஷியா மற்றும் உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் தேடப்படும் நபர்களின் பட்டியல் ஒன்று வெளிவந்துள்ளது. 

அந்தப் பட்டியலில் ஒருவராக, ரஷிய பாதுகாப்பு துறையின் துணைத் தலைவர் மெத்வதேவ் இருக்கிறார். இவர் மீது, உக்ரைன் நிலப்பரப்பின் ஒற்றுமையை வலுவிலுக்கவும், உக்ரைன் எல்லைகளில் அத்துமீறி நடந்து கொள்ள முயற்சி செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 

இந்த பட்டியலில் ரஷியா நாட்டில் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள பலர் இருக்கின்றனர். அவர்களில் ரஷிய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷோய்கு, நாடாளுமன்ற கீழவை தலைவர் வியாசெஸ்லாவ் விளாடின், மேலவை தலைவர் வேலன்டினா மத்வியங்கோ மற்றும் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலய் பட்ருசேவ் உள்ளிட்டோரும் இடம்பெறுகின்றனர்.

உக்ரைன் நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா மேற்கொண்டுள்ள படையெடுப்புக்கு பிறகு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விவரங்களை உக்ரைன் அதிகாரிகள் ஏன் முன்பே வெளியிடாமல், தற்போது வெளியிட்டுள்ளனர் என்ற விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

russia ex president on ukrain wanted list


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->