ராக்கெட் தாக்குதலில் 600 உக்ரைன் வீரர்கள் பலி - ரஷ்யா அறிவிப்பு
Russia says it killed 600 Ukrainian soldiers in rocket attack
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் ரஷ்ய படையில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு மாகாணங்களை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
இந்நிலையில் ரஷ்யா கைபற்றிய உக்ரைனின் டொனட்ஸ்க் மாகாணத்தில் உள்ள மகீவ்கா பகுதியில் முகாமிட்டிருந்த ரஷ்ய படைகள் மீது உக்ரைன் ராணுவம் அமெரிக்கா வழங்கிய அதிநவீன ஹிம்ராஸ் ராக ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 89 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக ரஷ்ய படைகள், கிழக்கு உக்ரையினில் உக்ரைன் வீரர்கள் தங்கி இருந்த தற்காலிக ராணுவ தளத்தின் மீது அடுத்தடுத்து ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த ராக்கெட் தாக்குதலில் 600 உக்ரையின் வீரர்கள் உயிரிழந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆனால், ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று கிராமடோர்ஸ்க் மேயர் தெரிவித்துள்ளார்.
English Summary
Russia says it killed 600 Ukrainian soldiers in rocket attack