கப்பலை தாக்கி அழிக்கும் சூப்பர்சோனிக் ஏவுகணை... சோதனை செய்த ரஷ்யா..!
Russia test supersonic missiles at target in Sea of Japan
ரஷ்யா கடற்படை ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலை துல்லியமாக தாக்கி அழிக்கும் சூப்பர் சோனிக் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதில், பசுபிக் கடலில் ஜப்பான் எல்லைக்கு வெளியே அமைந்துள்ள பீட்டர் தி கிரேட் வளைகுடாவில், சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் வைக்கப்பட்ட போலி இலக்குகளை மோஸ்கிட் க்ரூஸ் வகையைச் சார்ந்த பி-270 மோஸ்கிட் ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த பி-270 மோஸ்கிட் சூப்பர் சோனிக் ஏவுகணை, அணு ஆயுத போர் திறன் கொண்டது என்றும், ஒரு முழு கப்பலை தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜப்பான் கடல் எல்லைக்கு வெளியே ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும், அவற்றை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது.
English Summary
Russia test supersonic missiles at target in Sea of Japan