உக்ரைன் போருக்காக வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் ரஷ்யா.!
Russia to buy weapons from north Korea for Ukraine war
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையான போர் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இப்போரினை கண்டித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன.
தொடர்ந்து நடைபெற்று வரும் போரினால் ரஷ்ய ராணுவத்திற்கு தேவையான பீரங்கி குண்டுகள் மற்றும் ராக்கெட் குண்டுகளை ரஷ்யாவில் தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் ரஷ்யா மீதுள்ள பொருளாதார தடையால் ஆயுதங்கள் செய்ய தேவையான உதிரி பாகங்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இருந்து இறக்குமதி செய்யாத முடியாத சூழல் உருவாகியுள்ளது.
எனவே பெரும்பாலான நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வட கொரியாவிடமிருந்து ராக்கெட் குண்டுகள் உள்ளிட்ட லட்சக்கணக்கன தொலைதூர தாக்குல் ஆயுதங்களை ரஷியா வாங்கிக் குவித்து வருகிறது.
மேலும் போருக்கு தேவையான ராக்கெட் குண்டுகள், உள்ளிட்ட ஆயுதங்களை வடகொரியாவிடமிருந்து வாங்கும் நிலைக்கு ரஷியா தள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஈரானிடமிருந்து ஆளில்லா விமானங்களை போருக்காக ரஷ்யா வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Russia to buy weapons from north Korea for Ukraine war