நாட்டையும், மக்களையும் காப்பாற்ற ரஷ்யா அனைத்து வழிகளையும் பயன்படுத்தும் - உக்ரைன் அதிபர் பேச்சு..! - Seithipunal
Seithipunal


ரஷ்யா நாட்டின் அதிபரான விளாடிமிர் புதின் உக்ரைன் நாட்டுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று தான் நம்புவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,  "ரஷியா நாட்டைப் பாதுகாப்பதற்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அந்நாட்டு ராணுவம் தயாராக இருக்கும். அதனால் இந்த விஷயத்தை பொறுத்தவரை, அதிபர் புதின் மழுப்பவில்லை. உக்ரைன் மீது ரஷியா நிஜமாகவே அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும். 

ரஷியா தனது நாட்டையும்,  மக்களையும் பாதுகாப்பதற்காக கிடைக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவார்கள். ரஷிய படைகள் உக்ரைனில் உள்ள ஜாபோரிஜியா அணு ஆலையை கைப்பற்றி அணுஆயுத தாக்குதல் நடத்தவிருப்பதாக கடந்த காலங்களில் மிரட்டியது.

இந்நிலையில், எதிர்காலத்தில் உண்மையாகவே அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும்" என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

russia ukrain war ukrain president speech


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->