போரில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் பேரழிவை சந்திக்க நேரிடும்.! அமெரிக்கா எச்சரிக்கை.!
Russia will face consequences if it uses nuclear weapons in war
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் 1000-கணக்கான பொதுமக்கள் மற்றும் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் உக்ரைனில் இருந்து 20 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர்.
இப்போரில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடும் என்ற ஆச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் பேரழிவு விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர், ரஷ்யா போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் பேரழிவை சந்திக்க நேரிடும் என்றும், அமெரிக்கா ரஷ்யாவிற்கு சரியான பதிலடி கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக புடின் வெளிப்படையான அணுசக்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக ஐநா பொதுசபை கூட்டத்தில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
Russia will face consequences if it uses nuclear weapons in war