நேட்டோ உறுப்பு நாடுகளின் மீது தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - ரஷ்யாவுக்கு எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 8 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்து கெர்சன், ஜபோரிஜியா உள்ளிட்ட முக்கிய நகரங்களை மீண்டும் கைப்பற்றியுள்ளன.

மேலும் தொடர்ந்து முன்னேறி வரும் உக்ரைன் படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் முக்கிய நகரங்களின்‌ மீது ஏவுகணை மற்றும் வான்வெளி தாக்குதலை ரஷ்யா தீவிரபடுத்தியுள்ளது. இதற்கு நேட்டோ அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், ரஷ்யா போரில் தோல்வியை தழுவும் அச்சத்தால் அணு ஆயுத அமைப்புகளை ரஷ்யா குறி வைத்து தாக்கி வருவதாக நேட்டோ அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளின் அணு ஆயுத தளவாடங்கள் மற்றும் உள் கட்டமைப்பில் ரஷ்யா தாக்குதல் நடத்தினால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யாவிற்கு நேட்டோ அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia will face several consequences if attacks NATO countries


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->