கடினமான சவால்களை எதிர்கொள்ள வைத்தால் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தும் - முன்னாள் ரஷ்ய அதிபர் எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 7 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் 1000கணக்கான பொதுமக்கள் மற்றும் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை அளித்து வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் மீதான போரில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடும் என்ற ஆச்சம் நிலவிவரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் பேரழிவு சந்திக்க நேரிடும் என்றும், தகுந்த பதிலடி கொடுப்போம் என்று ரஷ்யாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஆனால் சவாலான சூழலுக்கு தள்ளப்பட்டால் அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தும் என்று முன்னாள் ரஷ்ய அதிபர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்ததாவது, ரஷ்யாவை கடினமான சவால்களை எதிர்கொள்ள வைத்தால், அணு ஆயுதங்கள் மூலம் தற்காத்துக் கொள்ள ரஷியாவுக்கு உரிமை உண்டு என்றும், இது மழுப்பலான விஷயமல்ல என்பதையும் உறுதிபடுத்தி கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia will use nuclear weapons if tough situation comes


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->