உக்ரைன் குழந்தைகளுக்காக நோபல் பரிசை விற்ற ரஷ்ய பத்திரிக்கையாளர்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யா உக்ரைன் ஏதம் இடையேயான போர் 100 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரினால் உக்ரைனின் 1000 கணக்கான வீரர்கள் மற்றும் அப்பாவி மக்கள் உயிர் இழந்து உள்ளனர்.

குறிப்பாக உக்ரைனில் பல குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர். இதனால் ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ரஷ்ய பத்திரிக்கையாளர் டிமிட்ரி முரடோவ் தனக்கு அளிக்கப்பட்ட தங்கப் பதக்கத்தை நியூயார்க் நகரில் ஏலத்திற்கு அளித்தார்.

ஏலத்தின் முடிவில் தங்கப்பதக்கம் 103 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 208 கோடிக்கு ஏலம் போகியுள்ளது.

இந்த தொகை முழுவதையும் உக்ரைனில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காக பத்திரிகையாளர் டிமிட்ரி முராடோவ் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நிறுவனமான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியதிற்கு வழங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian journalist who sold the Nobel Prize


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->