உயிர் பிழைப்பதற்காக உக்ரைன் பூங்காவில் உள்ள விலங்குகளை சாப்பிட்ட ரஷ்ய வீரர்கள்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யா உக்ரைன் இடியான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றன. 

தீவிரமடைந்த இப்போரில் ரஷ்ய படைகள் கைப்பற்றிய பகுதிகளை சில முக்கிய நகரங்களை உக்கரை படைகள் மீண்டும் கைப்பற்றியுள்ளது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்து உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டோனட்ஸ் நகரை மீட்க உக்ரைன் படையினர் போராடி வந்த நிலையில், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த டோனட்ஸ் மாகாணத்தின் யப்பில் கிராமத்தை உக்ரைன் படைகள் கடந்த சில நாட்களுக்கு முன் மீட்டது. 

ஆனால் யப்பில் கிராமத்தில் விலங்குகள் பூங்காவில் ரஷிய படைகள் கைப்பற்றுவதற்கு முன்பு 2 ஒட்டகங்கள், கங்காரு, காட்டெருமை, பன்றிகள், நரிகள் உள்ளிட்ட விலங்களும், பறவைகளும் இருந்தன. அனால் தற்போது யப்பில் பூங்காவில் இருந்த விலங்குகள் அனைத்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 

இதில் காங்காரு, ஒட்டகம், பன்றிகளில் உடல்பாகங்களும், எலும்பு கூடுகளும் பூங்காக்களை சுற்றி கிடக்கின்றன. போரின் போது ஏற்பட்ட உணவுதட்டுப்பாட்டின் காரணமாக ரஷிய வீரர்கள் பசியால் பூங்காவில் உள்ள ஒட்டகம், பன்றி, கங்காரு போன்ற விலங்குகளை கொன்று சாப்பிட்டு உயிர் பிழைத்துள்ளதாக உக்ரைன் மீட்பு குழுவில் பணியாற்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian Soldiers ate Animals in Ukraine Park to Survive


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->