கருங்கடலில் அமெரிக்க ட்ரோன் மீது ரஷ்ய போர் விமானம் தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


கருங்கடல் பகுதியில் முதல்முறையாக அமெரிக்கா டிரோனை ரஷ்யா போர் விமானம் தாக்கிய சம்பவம் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் எம்.க்யூ-9 ரக ஆளில்லா விமானம் சர்வதேச கடல் எல்லையில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. அப்பொழுது ரஷ்யாவின் இரண்டு Su-27 போர் விமானங்கள் இடைமறித்து அமெரிக்கா ஆளில்லா விமானம் மீது மோதியுள்ளது. இந்த சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை மத்திய ஐரோப்பிய நேரப்படி 07:03 மணிக்கு நடந்ததாகவும், இதில் அமெரிக்க ஆளில்லா விமானம் கருங்கடலில் விழுந்து நொறுங்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் MQ-9 விமானம் சர்வதேச வான்வெளியில் வழக்கமான செயல்பாடுகளை நடத்திக்கொண்டிருந்தபோது, ரஷ்ய விமானத்தால் இடைமறித்து தாக்கப்பட்டது. இதன் விளைவாக MQ-9 விபத்துக்குள்ளானது மற்றும் முற்றிலும் அழிந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian warplane attack on American drone in Black Sea


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->