ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி - 3 வது இடத்தை பெறும் அந்த நாடு எது? - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் மாதம் தாய்லாந்து நாட்டில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதற்கான மசோதா அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. 

இதைத் தொடர்ந்து ஓரின சேர்க்கையாளர்கள் திருமண சட்டமசோதா அந்த நாட்டின் மன்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மசோதாவுக்கு அந்த நாட்டின் மன்னர் ஒப்புதல் அளித்துள்ளார். 

அதன் படி வருகிற ஜனவரி மாதத்தில் இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஆசியாவில் ஒரே பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கும் 3-வது நாடு என்ற சிறப்பை தாய்லாந்து பெறுகிறது.

இதற்கு முன்னதாக தைவான் மற்றும் நேபாளத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

same generation marriage allow in thailand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->