சவுதி அரேபியாவில் திறக்கப்படும் முதல் மதுபானக்கடை! ஆனால்...  - Seithipunal
Seithipunal


மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த சவூதி அரேபியாவில் அந்நாட்டு அரசு முதல் முறையாக மதுபான கடை திறக்க திட்டமிட்டுள்ளதாக இளவரசர் முகமது பின் சல்மான் அறிவித்துள்ளார். 

சவுதி அரேபியா ரியாத் நகரத்தில் முஸ்லிம்கள் அல்லாத வெளிநாட்டினருக்கு மதுபானங்கள் விற்பனை செய்ய மதுபான கடை விரைவில் திறக்கப்பட உள்ளது. 

மேலும் மது பெற வேண்டும் என்றால் வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி குறியீடு பெற்று மொபைல் செயலி மூலமாக பதிவு செய்ய வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

மதுபான கடையின் வாடிக்கையாளர்களாக தூதரகங்களில் பணியாற்றுபவர்களாக இருப்பார்கள். சவுதி அரேபியாவில் கடந்த 70 ஆண்டுகளில் மதுபானம் கடை மூலம் மதுபானம் விற்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 

முதல்முறையாக சவூதி அரேபியாவில் மதுபான கடை திறக்கப்படுவதால் இஸ்லாமிய சட்ட கோட்பாட்டில் இருந்து இளவரசர் விலகிச் செல்கிறாரா என கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Saudi Arabia opens first liquor store


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->