கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்!...நாளை தொடங்குகிறது அமெரிக்க அதிபர் தேர்தல்! - Seithipunal
Seithipunal


உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் காலம் காண்கின்றனர்.

அங்கு ஒட்டு மொத்தமாக 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 7 கோடிக்கும் அதிகமானோர் ஏற்கனவே தங்கள் வாக்கினை செலுத்தி உள்ளனர்.

இது தவிர எஞ்சிய பொதுமக்கள் அமெரிக்காவில் உள்ள  50 மாகாணங்களில் நாளை வாக்களிக்க உள்ளனர். மேலும், வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தொடர்ந்து, இழுபறி நீடிக்காவிட்டால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரத்திலேயே அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது தெரிந்துவிடும்.

இந்திய நேர தற்போதைய நிலவர கருத்துக்கணிப்புகளின் படி, இந்திய வம்சாவளி கமலா ஹாரிசுக்கு 49 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், டிரம்புக்கு 48 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sensational information in the survey the us presidential election begins tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->