துபாயில் கண்டெய்னர் லாரியில் மோதிய பேருந்து.! கர்நாடகாவைச் சேர்ந்த 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாபி சுல்லேட். இவர் ராய்ச்சூர் வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தரின் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் மனைவி சிராஜ்பேகம். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்நிலையில் ஷாபி தனது குடும்பத்தினருடன் கடந்த 14-ந்தேதி மெக்காவுக்கு புறப்பட்டு சென்றார். இதையடுத்து அவர்கள் நேற்று முன்தினம் துபாயில் இருந்து பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கன்டெய்னர் லாரியும், அவர்கள் சென்ற பேருந்தும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் சிக்கி ஷாபி, அவரது தாய், மனைவி சிராஜ் பேகம், மகள் ஷிபா உள்ளிட்டோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், ஷாபியின் மகன் சமீர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

துபாயில் நடந்த இந்த விபத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆறு பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் இறுதிச்சடங்குகளும் துபாயில் நடத்துவதற்கு உறவினர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six karnataga peoples died in dubai for bus accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->