அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்திய குடும்பம் உள்பட 6 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல காரணங்களினால் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்கா நாட்டிற்கு சட்டவிரோதமாக குடியேறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் கடல் வழி பயணத்தை தேர்தெடுத்துள்ளனர்.

அப்படி மக்கள் கடல் வழியாக வரும் போது வழியில் பல அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன. இதில் குழந்தைகள் உள்பட ஏராளமான மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் ஏற்படுகிறது. இந்த நிலையில், கனடா எல்லை வழியாக இந்தியா மற்றும் ரோமானியா நாடுகளைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் ஏழு பேர் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக செல்ல வந்துள்ளனர்.

இதையடுத்து இவர்கள் கனடாவில் இருந்து செயிண்ட் லாரன்ஸ் ஆறு வழியாக படகில் சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் பயணிம் செய்த படகு எதிர்பாராத விதமாக கவிழ்ந்துள்ளது. இதனால், அவர்கள் அனைவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். 

இதையறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில், இந்திய குடும்பத்தினர் உள்பட ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு குழந்தை மாயமாகியுள்ளது. மீட்புப் படையினர் அந்தக் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six migrants died in canada border


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->