தலைதூக்கும் குரங்கம்மை பாதிப்பு - 6 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


வியட்நாம் நாட்டில் குரங்கம்மை நோய் அதிகளவில் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக நாட்டின் தெற்கு மாகாணமான லாங் ஆன்னில் நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதுவரைக்கும் 117 பேர் குரங்கம்மை பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 

மேலும், குரங்கம்மை பாதிப்பு காரணமாக இதுவரைக்கும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தொற்று எண்ணிக்கை கடந்த நவம்பர் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக ஹோ சி மின் நகரத்தின் வெப்பமண்டல நோய்களுக்கான மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஹுய்ன் தி துய் ஹோ பேசியதாவது:- 

"கடந்த மூன்று மாதங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 49 பாதிப்புகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் குணமடைந்ததுடன், மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six peoples died for monkeypox virus in viyatnam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->