வரலாற்றில் முதல் முறையாக சிரிப்பு தினம் - ஜப்பானில் புதிய உத்தரவு.!
smile day start in jappan
சிரிப்பு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியமான ஒன்று. இது பற்றி ஜப்பானின் யமகட்டா பல்கலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், இந்த சிரிப்பு இதய நோய் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது என்று தெரிய வந்தது.
அந்த ஆய்வின் அடிப்படையில் ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாதத்தின் 8வது நாளை, சிரிப்பு தினமாக மக்கள் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இந்த உத்தரவு தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கும் என்றும், நோய் அல்லது வேறு காரணங்களால் சிரிக்க முடியாதவர்களின் உரிமைகளை இந்த உத்தரவு மீறுவதாகவும் அங்குள்ள சில அரசியல்வாதிகள் விமர்சித்துள்ளனர்.
தினமும் சிரித்தால் மன அழுத்தம், பதற்றம் குறைந்து ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. உலகிலேயே முதல் முறையாக சிரிப்புக்காக ஒரு நாளை ஒதுக்கிய பெருமை ஜப்பான் நாட்டிற்கு கிடைத்துள்ளது.
English Summary
smile day start in jappan