அமெரிக்காவில் கடும் பனி சூறாவளி.! இருளில் மூழ்கிய 1.2 மில்லியன் மக்கள் - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வரும் நிலையில், திடீரென்று உருவாகியுள்ள வெடிகுண்டு பனி சூறாவளி எனப்படும் இந்த கடும் குளிர் புயல் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

இதில் அமெரிக்காவின் பஃபலோ, டெக்சாஸ், சிகாகோ, நியூயார்க், ஓஹியோ ஆகிய பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கடும் பனிச்சூறாவளியால் சாலைகள், வீடுகள் மற்றும் வாகனங்களின் மீது பனி சூழ்ந்துள்ளது. மேலும் விமான நிலையங்கள் கடும் பனிப்பொழிவால் மூடப்பட்டுள்ளன. இதனால் 5000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் இந்தப் பனிப்பொழிவால் மின் இணைப்புகள் பாதிக்கப்பட்டு இதுவரை 1.2 மில்லியன் மக்கள் மின்தடையால் இருளில் மூழ்கியுள்ளனர். மேலும் வெப்பநிலை மைனஸ் 48 டிகிரிக்கும் கீழ் சென்றுள்ளதால், அமெரிக்காவில் 20 கோடி மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களின் பயணங்களை ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Snow storm hit america leaves 1 point 2 million people without power


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->