#BREAKING || பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் 6 புதிய நாடுகள்.!! தென்னாப்பிரிக்க அதிபர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15வது உச்சிமாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

உறுப்பு நாடுகளின் ஒருமித்த கருத்துடன் பிரிக்ஸ் கூட்டமைப்பை விரிவுபடுத்த இந்தியா முழு ஆதரவு அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருந்தார். பிரிக்ஸ் கூட்டமைப்பு எதிா்காலத்திற்கு ஏற்றார் போல் உருவாக்க வேண்டும் எனவும், இதற்கு உறுப்பு நாடுகளின் சமூகங்களை எதிா்காலத்துக்கு ஏற்ப தயாா்படுத்துவது அவசியம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் தென்னாப்பிரிக்க தலைமையின் கீழ் நாடுகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மோடி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகள் இணைய உள்ளதாக தென்னாப்பிரிக்க அதிபர் ரமஃபோசா அறிவித்துள்ளார். அதன்படி அர்ஜென்டினா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் ஆகிய நாடுகளை பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதன் மூலம் அமெரிக்க அல்லாத ஒரு வலுவான கூட்டமைப்பை பிரிக்ஸ் நாடுகள் உருவாக்கியுள்ளன. வர்த்தகம், பொருளாதாரம், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பிரிக்ஸ் நாடுகள் ஒருமித்த கருத்தோடு செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்கள் சந்திராயன்-3 வெற்றிக்கு வாழ்த்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South African President announces that 6 new countries will join BRICS


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->