தென்னாபிரிக்காவில் ஒரு மணி நேரத்தில் 249 கப் தேநீர் தயாரித்து பெண் உலக சாதனை.! - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இங்கார் வாலன்டின் என்கிற பெண் ஒரு மணி நேரத்தில் 249 தேநீர் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார்.

31 டிசம்பர் 2018 அன்று தென்னாப்பிரிக்காவின் வுப்பர்தால் மலைகிராமத்தில் காட்டுத்தீ பரவி பெரும் அழிவை ஏற்படுத்தியது. ஒரு சில கட்டிடங்கள் மட்டுமே தீயால் பாதிக்கப்படாத நிலையில், 200க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர். வீடுகளை இழந்தவர்களில் ஒருவர் தான் இங்கார் வாலண்டின்.

இவர் சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சி மற்றும் அவரது வுப்பர்தல் சமூகத்தின் மீள்தன்மையைக் கொண்டாடும் முயற்சியில், இங்கார் ஒரு மணி நேரத்தில் அதிக கப் தேநீர் தயாரித்து சாதனை படைக்க முயன்றார்.

இந்த சாதனையை அடைய ஒரு மணி நேரத்திற்குள் குறைந்தபட்சம் 150 கப் தேநீர் தயாரிக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தது. ஆனால் அவர் ரூயிபோஸ் வகை தேநீரில் அசல், வெண்ணிலா மற்றும் ஸ்டாபெரி என மூன்று வகைகளில் 249 கப் தேநீர் தயாரித்து உலக சாதனை படைத்தார்.

தென்னாப்பரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட தாவரமான அஸ்பலதஸ் லீனரிஸ் என்கிறத புதர் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் சிவப்பு மூலிகை தேநீர் "ரூயிபோஸ்" என்று அழைக்கப்படுகிறது.

சாதனை முயற்சியின்போது வாலன்டின் தெளிவான மனதை கொண்டு, விறுவிறுப்பாக ஒவ்வொரு டீ கோப்பையிலும் 4 தேநீர் பைகளை போட்டார். சரியான ரூயிபோஸ் தேநீராகத் தகுதிபெற ஒவ்வொரு தேநீர் பையும் குறைந்தது இரண்டு நிமிடங்களுக்கு நன்கு ஊற வேண்டும்.

முதல் மூன்று தேநீர் கோப்பைகளில் தேநீர் பைகளை நிறப்பிய பிறகு, அடுத்த கோப்பையை நிறப்பினார். இப்படி வாலன்டின் திட்டமிட்டு ஒரு மணி நேரத்தில், அதாவது நிமிடத்திற்கு 4 கப்க்கும் மேல் தேநீர் என மொத்தம் 250 தேநீர் தயாரித்தார். ஆனால் ஒரு கப் மட்டும் அளவில் பூர்த்தியாகாததால் நீக்கப்பட்டது.

இருப்பினும் 150 என்ற இலக்கை முறியடித்து 249 தேநீர் கப்பை தயாரித்து உலக சாதனை படைத்தார். இந்த சாதனை முயற்சியின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டு தேநீரை அருந்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South African woman breaks world record by making 249 tea cup in one hour


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->