144 கி.மீ. வேகத்தில் தென்கொரியாவை தாக்கிய "ஹன்னம்னோர்" புயல்..! - Seithipunal
Seithipunal


மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவான மிகவும் திறமை வாய்ந்த சூறாவளி புயல், ஜப்பான்- சீனாவின் கிழக்கு பகுதி மற்றும் தென் கொரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், "ஹன்னம்னோர்" என்று பெயரிடப்பட்ட அந்த புயல் தென்கொரியாவின் தெற்கு பகுதியில் ஜெஜூ கடற்பரப்பை சென்று அடைந்தது. துறைமுக நகரான பூசனுக்கு வடமேற்கில் கரையை கடக்கும் போது சுமார் 144 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. 

இதனால், மின் கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்தன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வருவதால் அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டதால் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது. 

ஏற்கனவே, புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. தென்கொரியாவின் தெற்கு பகுதியில், கனமழை, வெள்ளம், சூறாவளி காற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில், புயலால் அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

south coria attacked hannamnor typhoon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->