எல்லை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.! தென்கொரியா எச்சரிக்கை.!
South korea warns Border agreement will be cancelled
அமெரிக்கா மற்றும் தென் கொரியா கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டதை எதிர்த்து வடகொரியா தனது எல்லைப் பகுதியில் ஏவுகணை சோதனைகளை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தென்கொரிய எல்லைப் பகுதியில் வீசி சோதனை செய்துள்ளது.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்கொரியாவின் வான் எல்லைக்குள் ஆளில்லா விமானங்களை வடகொரியா அனுப்பியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.
இந்நிலையில் அத்து மீறி வான் எல்லைக்குள் வடகொரியா ஆளில்லா விமானங்களை அனுப்பினால், இரு நாடுகளுக்கிடையே 2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட எல்லை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என தென்கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஒப்பந்தம் கொரிய தீப கற்ப்பத்தில் அமைதியை நிலை நாட்டுவதற்காக நீண்ட கால பேச்சுவார்த்தைக்கு பின் இரு நாடுகளுக்கு இடையே 2018ஆம் ஆண்டு கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
English Summary
South korea warns Border agreement will be cancelled