நிலவுக்கா? செவ்வாய்க்கா? தயார் நிலையில் ஸ்பேஸ் எக்ஸ்-ன் 120 டன் திமிங்கலம்!
SpaceX has announced Starship is ready to carry humans into space
உலகின் முன்னணி மற்றும் முதல் பணக்காரரான எலான் மஸ்கின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்லும் விண்கலம் தயாராக உள்ளது என அறிவித்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள ஸ்டார்ஷிப் விண்கலத்தின் அனைத்து சோதனைகளும் நிறைவடைந்துள்ளது.
ஸ்பேஸ் ராக்கெட் ஏவுதளத்தில் விண்கலம் தயாரான நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 25 முதல் 30 மாடி உயரம் கொண்ட இந்த விண்கலம் 120 டன் எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. டிராகன் பூஸ்டர் ராக்கெட் மூலம் ஸ்டார்ஷிப் விண்கலமானது செலுத்தப்படுகிறது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மனிதர்களை சுமந்து செல்வதற்காக அமெரிக்க விண்வெளி துறையின் அனுமதிக்காக காத்திருக்கிறது. விண்ணில் ஏவப்படும் இந்த ஸ்டார்ஷிப் விண்கலம் புவியீர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு தானாகவே பயணித்து தரையிறங்கும் வல்லமை கொண்டது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலத்தின் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
SpaceX has announced Starship is ready to carry humans into space