இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்!...விறு விறுப்பாக பொதுமக்கள் வாக்களிப்பு! - Seithipunal
Seithipunal


இலங்கையின் புதிய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளா் அனுரகுமார திசாநாயக வெற்றி பெற்று தற்போது அதிபராக விளங்கி வருகிறார்.

இந்த நிலையில், இலங்கையின் 17-வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வரும் நிலையில், இன்று மாலை  4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது.

தொடர்ந்து இன்று மாலை வாக்குப் பதிவு முடிவடைந்த சில மணி நேரங்களில் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அங்கு 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை நடந்த தேர்தல்களில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளே நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று உள்ளது.

இந்த தேர்தலிலும்  அநுர குமாரா திசநாயகா கட்சிக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் தேர்வு முடிவுகள் அடிப்படையில் இன்று வெற்றி பெறப்போவது யார் என்பது தெரிய வரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri lanka presidential election today people are voting briskly


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->