போராட்டத்தை கௌரவிக்கும் நிகழ்ச்சிகளுக்கு தடை.! நீதிமன்றம் அதிரடி
Srilanka court bans functions honouring protests
இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்த்து அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் எழுந்தன. மேலும் போராட்டக்காரர்களால் பிரதமர் கோத்தபய ராஜபக்சே இல்லம் மற்றும் ஜனாதிபதி மாளிகை சூறையாடப்பட்டன.
இதை தொடர்ந்து கடந்த ஆண்டு மே 9ஆம் தேதி இலங்கையில் அதிபர் பதவி விலகுவதாக அறிவித்தார். பின்னர் இலங்கையின் அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். இதனிடையே முன்னாள் பிரதமர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகி ஓராண்டு நிறைவுபெற்றதை கொண்டாடும் வகையில் இலங்கையில் பெரும்பாலான இடங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் போராட்டக்காரர்களால் மீண்டும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படலாம் என கருதி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க காவல்துறையினர் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பொருளாதார நெருக்கடி மற்றும் சட்டம் ஒழுங்கு காரணமாக போராட்டத்தை கௌரவிக்கும் நிகழ்ச்சிகளுக்கு இலங்கை நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் ஜனாதிபதி மாளிகை, அதிபர் செயலகம் மற்றும் நிதி அமைச்சகத்தில் மக்கள் ஒன்று கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
Srilanka court bans functions honouring protests