இலங்கையில் பொருளாதாரப் பிரச்சினையை சமாளிக்க வட்டி விகிதத்தை இருமடங்காக உயர்த்திய மத்திய வங்கி.!
Srilanka Economic crises
பொருளாதார பிரச்சனையை சமாளிக்க இலங்கையில் வட்டி விகிதத்தை இரு மடங்காக அதிகரித்தது மத்திய வங்கி.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு பொருட்கள், எரி பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது மட்டுமல்லாமல் அவற்றின் விலையும் அதிகளவில் உயர்ந்துள்ளது. இந்த பொருளாதார நெருக்கடி மற்றும் அதிக விலை ஏற்றம் தொடர்பாக இலங்கையில் அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் கடனுக்கான வட்டி விகிதம் மற்றும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 700 அடிப்படை புள்ளிகள் என்ற அளவில் 14.50 சதவீதம் வரை உயர்த்தி இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.