வாங்கிய கடனை திருப்பி அளிப்பது சவாலான விஷயம்! நிலைமை சீரான பின் கடன்கள் அடைபடும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தகவல்.! - Seithipunal
Seithipunal


வாங்கிய கடனை திருப்பி அளிப்பது சவாலான விஷயம், நிலைமை சீரான பின் கடன்கள் அடைக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எரிபொருட்கள், உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பது மட்டுமல்லாமல் அவற்றின் விலையும் அதிகளவில் உயர்ந்துள்ளது. இந்தப் பொருளாதார நெருக்கடி மற்றும் அதிக விலை ஏற்றம் தொடர்பாக இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் வீதிகளிலும், நாடாளுமன்றத்தின் முன்பும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வாங்கிய கடனை திருப்பி அளிப்பது தற்போது சூழ்நிலையில் சவாலான விஷயமாகும்.

எனவே நிலைமை சரியான பின் வாங்கிய அனைத்து வெளிநாட்டு கடன்களும் திரும்பி அடைக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தகவல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilanka economic crises solve other countries loan return


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->