இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஆதரவு.!! - Seithipunal
Seithipunal


இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே ஷ குடும்பமே காரணம் என இலங்கை மக்கள் மற்றும் எதிர் கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து, அந்நாட்டு மக்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டம் வன்முறையாக மாறி இலங்கையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. போராட்டத்தின் எதிரொலியாக பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். இதையடுத்து, இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே கடந்த வாரம் பதவி ஏற்றார்.  இதையடுத்து அவர் அனைத்து கட்சிகளின் ஆதரவைக் கோரி இருந்தார். 

இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதேசா திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார். மக்களின் கொள்கைகளுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய ஜனதா கட்சி செயல்பட்டால் ஆதரவை திரும்பப் பெறப்படும். நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கவே இந்த ஆதரவு என அவர் நிபந்தனை விதித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilanka opposition party support for ranil wickremesinghe


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->