இலங்கை மக்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எச்சரிக்கை.. 2 வேளை மட்டுமே உணவு.!! - Seithipunal
Seithipunal


இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பிறகு பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இருந்தபோதிலும் இன்னும் அங்கு அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. 

சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இன்னும் மூன்று நாட்களுக்குப் பிறகு எரிபொருள் சிலிண்டர் விநியோகம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இலங்கையில் பொதுமக்கள் இரண்டு வேலை மட்டுமே சாப்பிடும் நிலை வரும் என பிரதமர் ரரணில் விக்கிரமசிங்கே எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவதுm இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தீர்க்க பல்வேறு நாடுகளின் உதவியை நாடி வருகிறோம். இதற்கு சில பில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது. இது கிடைக்காவிட்டால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். 

போதுமான உரங்கள் இல்லாததால் விவசாய பணிகளை செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. வருகின்ற செப்டம்பர், அக்டோபர் வரை நாட்டின் உணவு வெளியாகும் நீடிக்கும். அதன் பிறகு பொதுமக்கள் இரண்டு வேலை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilanka pm ranil wickremesinghe says food crisis


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->