ஐ.எம்.எப்-பின் உதவி இலங்கை வரலாற்றில் ஒரு மைல்கல் - அதிபர் ரணில் நன்றி - Seithipunal
Seithipunal


பணவீக்கம், அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இலங்கையில் வரலாறு காணாத அளவு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை நிதி உதவி கேட்டிருந்தது. இதற்கு சர்வதேச நாணய நிதியம் பல்வேறு கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் விதித்தது.

இந்நிலையில் திவாலான பொருளாதாரத்தை சீர்திருத்தவும், கடனை மறுசீரமைப்பதற்கும்,  இலங்கைக்கு 3 பில்லியன் டாலர் கடன் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த புதன்கிழமை அரசாணையில் வெளியிட்டது. இந்த நிதி உதவியில் 333 மில்லியன் டாலர்கள் உடனடியாக வழங்கப்படும் என்றும், மீதம் உள்ள நிதி 48 மாதங்களுக்குள் பல தவணைகளாக அளிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து, இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் இந்த உதவிக்கு நன்றி தெரிவித்த இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, இந்த நிதி உதவி இலங்கையின் நிர்வாக மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நாணய நிதியத்தின் இந்த நிதி உதவி, இலங்கை வரலாற்றில் ஒரு மைல் கல் என்றும், நிதியத்திற்கு இலங்கை எப்பொழுதும் கடமைப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilanka president thanks as IMF financial assistance is milestone


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->