மீண்டும் இலங்கை‌‌ கடற்படை அட்டூழியம் : 14 தமிழக மீனவர்கள் கைது! - Seithipunal
Seithipunal


நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்தனர். 

தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 14 மீனவர்கள் சென்றனர். தொடர்ந்து நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மீனவர்களின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும், மீனவர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மீனவர்களின் கைதுக்கு தற்போது மீண்டும் பல்வேறு அரசியல் கட்சியின ர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilankan navy atrocity again 14 tamil nadu fisherman arrested


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->