தீவிரவாதத்தின் வாசல் 'தப்லிக் ஜமாத்' அமைப்பை தடை செய்த சவூதி அரசு.! அடுத்து தடைசெய்ய போகும் நாடுகள்.! - Seithipunal
Seithipunal


சவுதி அரேபிய நாட்டில் 'தப்லிக் ஜமாத்' அமைப்பை தடை செய்வதாக, அந்நாட்டின் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

தீவிரவாதத்தின் வாசல்களில் ஒன்றாக 'தப்லிக் ஜமாத்' அமைப்பு இருப்பதால், அதனை தடை செய்வதாக, இஸ்லாமிய விவகாரங்களுக்கான சவுதி அரேபிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்லாமிய விவகாரங்களுக்கான சவுதி அரேபியா அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

"தப்லீக் ஜமாத் அமைப்பு தீவிரவாதத்தின் வாசல்களில் ஒன்றாக உள்ளது. எனவே, இதனை தடை செய்கிறோம். தப்லீக் ஜமாஅத் அமைப்புக்கு வருகின்ற நிதி உதவிகள் பெருமளவு சவுதி அரேபியாவில் இருந்து தான் கிடைத்து வருகிறது.

உலகின் பல நாடுகளில் பரவியுள்ள தப்லீக் ஜமாத்தின் செயல்பாடுகள் இனி மெல்ல மெல்ல முடங்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவை தொடர்ந்து வேறு சில நாடுகளும் தப்லீக் ஜமாத் அமைப்பிற்கு தடை விதிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்த அமைப்பில் அதிக இஸ்லாமியர்கள் இருக்கக்கூடிய நாடுகளான பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் தடை விதிப்பது சாத்தியமில்லாத ஒன்று என்றும் சொல்லப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tablighi jamaat ban in saudi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->