ஜப்பான் || ஷிசுவோகா மாகாணத்தை தாக்கிய தலாஸ் புயல்.! 2 பேர் பலி - Seithipunal
Seithipunal


வடகிழக்கு ஆசிய நாடான ஜப்பானில் மத்திய பகுதியான ஷிசுவோகா மாகாணம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சக்தி வாய்ந்த தலாஸ் புயல் தாக்கியதில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலால் ஏற்பட்ட கனமழையால் 417 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ள நிலையில், நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரால் மேம்பாலங்கள் மற்றும் சாலைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் பெரும்பான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து புயலால் முக்கிய இரண்டு மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால், மாகாணத்தில் மின்தடை ஏற்பட்டு சுமார் 120000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. இதுவரை புயலால் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சிறு குழந்தை உட்பட மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Talas typhoon attacks Japan Shizuoka city


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->