ஆப்கானிஸ்தான்: பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தடை.!
Taliban announced temporary ban on women studying in universities in Afghanistan
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை அமைத்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையிலல், தாலிபான்கள் கடுமையான ஷிரியா சட்டத்தின் மூலம் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
குறிப்பாக பெண்களுக்கு ஆறாம் வகுப்பிற்கு மேல் கல்வி கற்க தடை, ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு, விமானத்தில் ஆண்கள் துணையின்றி செல்ல தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தாலிபான்களின் இந்த நடவடிக்கைகளுக்கு ஐ.நா மற்றும் சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததோடு, தனி மனித உரிமைகளை மீறுவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தாலிபான் அரசு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மேலும் இந்த உத்தரவு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும், மறு உத்தரவு அளிக்கப்படும் வரை இது நடைமுறையில் இருக்கும் என்று தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.
English Summary
Taliban announced temporary ban on women studying in universities in Afghanistan