மக்களுக்காக உழைத்த கலைஞர் பெயரை வைக்காமல் வேறுயார் பெயரை வைக்க முடியும்?...உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
Who else can name an artist who worked for the people without naming them udhayanidhi stalin
சென்னை ஆர்.கே.நகரில் திமுக சார்பில் நடைபெற்ற எளியோர் எழுச்சி நாள் கொண்டாட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியின் திட்டங்களை மக்கள் கொண்டாடுவதை பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு கோவம், எரிச்சல் வருகிறது என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மக்கள் வாழ்த்துகிறார்கள் என்று தெரிவித்த அவர், அது அவருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்தார்.
மேலும், அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்பதாக பேசிய அவர், தன் 96 வயது வரை தமிழ்நாட்டுக்காக, தமிழ் மக்களுக்காக ஓயாது உழைத்த முத்தமிழறிஞர் கலைஞர் பெயரை சூட்டாமல் வேறு யார் பெயரை வைக்க முடியும் என்றும், கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சியின் பெயரை வைக்கலாமா என்று காட்டமாக பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதா பெயரை வைத்தால் கூட எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றும், அவருக்கு மோடி அல்லது அமித்ஷா பெயரை தான் வைக்க வேண்டும் என்று விமர்சித்தார்.
English Summary
Who else can name an artist who worked for the people without naming them udhayanidhi stalin