அரசியல் அராஜகம் ஒழியட்டும், நீதி வெல்லட்டும் - நடிகை கஸ்தூரி முழக்கம்! - Seithipunal
Seithipunal



பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி பேசுகையில், அந்தப்புர பெண்களுக்கு சேவை செய்ய வந்த தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் தமிழர்கள் என்று கூறும் போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யாருங்க" என்று கேள்வி எழுப்பி பேசி இருந்தார்.

கஸ்தூரியின் இந்த பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், காவல்நிலையங்களில் அவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவர் தலைமறைவான நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடிகை கஸ்தூரி முன் ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஹைதரபாத்தில் வைத்து நடிகை கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்து இன்று சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினார்.

பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடிகை கஸ்தூரியை அழித்து செல்லும்போது, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் முன்பு அரசியல் அராஜகம் ஒழியட்டும், நீதி வெல்லட்டும் என கஸ்தூரி முழக்கமிட்டு சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Kasturi Arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->