உணவு மற்றும் நிதிப் பற்றாக்குறை.! பொருளாதார தடையை திரும்பப் பெற உலகநாடுகளுக்கு தாலிபான்கள் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


உணவு மற்றும் நிதிப் பற்றாக்குறையால் பொருளாதார தடையை திரும்பப் பெற உலகநாடுகளுக்கு தாலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு தனது கடுமையான ஷிரியா சட்டத்தை கொண்டு ஆட்சி செய்து வரும் நிலையில் உணவு பற்றாக்குறையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தலிபான்களின் அடக்குமுறை ஆட்சியால் அன்னிய முதலீடுகள் மற்றும் புதிய தொழில் தொடங்க வாய்ப்பின்மை போன்ற காரணங்களால் பொருளாதாரம் சரிவை நோக்கி சென்றுள்ளது. மேலும் தனிநபரின் சராசரி வருமானம் மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தான் பெரிதளவில் சார்ந்திருக்கும் வளர்ச்சி உதவிகளை மேற்கு நாடுகள் பெருமளவில் நிறுத்தி விட்டதும், அந்நாட்டின் மத்திய வங்கி கையிருப்புகளை முடக்கியதுமே இந்த நெருக்கடிகளுக்கான அடிப்படை காரணமாக உள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் நிலவும் உணவு பற்றாக்குறை மற்றும் அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க மேற்கு நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகள் முடக்கிய ஆப்கன் மத்திய வங்கியின், பில்லியன் டாலர் கணக்கிலான முதலீடுகள் மற்றும் சொத்துக்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்று உலக நாடுகளுக்கு தாலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Taliban asked west countries to lift sanctions for food shortage


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->