ஆப்கானிஸ்தான்: 2¼ கோடி இணையதளங்கள் முடக்கம் - தாலிபான் அரசு - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி அமைத்ததில் இருந்து தனது கடுமையான ஷிரியா சட்டத்தைக் கொண்டு ஆட்சி செய்து வருகிறது. கடந்த ஓராண்டில் ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி, வேலைவாய்ப்பு தடை செய்யப்பட்டு பெண் சுதந்திரம் முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் கேளிக்கை நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. மேலும் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஊடகங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஒழுக்க கேடான விஷயங்களை வெளிப்படுத்தும் 2¼ கோடி இணையதளங்களை முடக்கியுள்ளதாக தாலிபான் அரசின் தகவல் தொடர்பு அமைச்சர் நஜிபுல்லா ஹக்கானி தெரிவித்துள்ளார்.

இதுவரை 2 கோடியே 34 லட்சம் இணையதளங்களை முடக்கியுள்ள நிலையில், ஒன்றை தடை செய்யும்போது அவர்கள் மற்றொரு பெயரில் இணையதளத்தை தொடங்குகிறார்கள். ஆனால், ஒழுக்கக்கேடான விஷயங்களை காட்சிப்படுத்தும் இணையதளங்கள் செயல்பட ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது என்று நஜிபுல்லா ஹக்கானி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Taliban bans 2 crore websites in Afghanistan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->