ஆப்கானிஸ்தான்: கடந்த ஆட்சியில் பெற்ற விவாகரத்து செல்லாது - தாலிபான்கள் அதிரடி அறிவிப்பு - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தாலிபான்கள் ஆட்சி அமைத்தபின், பெண்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றி வருகிறது. பெண்கள் கல்வி கற்க தடை, ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு, பல்கலைக்கழகங்களில் பயில தடை, தொண்டு நிறுவனங்களில் வேலை செய்ய தடை என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதனால் பெண் சுதந்திரம் முற்றிலும் மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் கடந்த ஆட்சியில் பெண்களுக்கு அளிக்கப்பட்ட விவாகரத்தை திரும்ப பெறுவதாக தாலிபன் அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து பெண்கள் வலுக்கட்டாயமாக முன்னாள் கணவர்களிடம் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

முன்னாள் கணவர்களால் பாலியல் மற்றும் உளவியல் ரீதியான துன்பங்களை அனுபவித்த பெண்கள் புதிய சட்டத்திற்கு பயந்து தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் முன்னாள் கணவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தால் அல்லது வெளிநாடுகளுக்கு தப்பி சென்றிருந்தால் மட்டுமே பெண்களுக்கு விவாகரத்து வழங்க தாலிபன் அரசு அனுமதித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Taliban withdrew divorce given in last regime in Afghanistan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->