தமிழக மீனவர்களுக்கு  4-ந்தேதி வரை காவலில் வைக்க பருத்தித் துறை நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கடந்த 27-ந்தேதி நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் 15க்கும் மேற்பட்ட படகுகளில் மீன் பிடிப்பதற்கு கடலுக்கு சென்றனர்.

அவர்களில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த நான்கு பேர் மீன் பிடிப்பதற்காக கடலில் வலை வீசி காத்திருந்தனர். அப்போது திடீரென வலைகள் அறுந்ததால் மீனவர்கள் வலையை எடுக்கும் முயற்சியில் எல்லை தாண்டி சென்றுள்ளனர். 

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் நான்கு பேரையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர். அதன் பின்னர் அவர்கள் நான்கு பேரும் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும், அவர்களின் படகையும் பறிமுதல் செய்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து அவர்கள் நான்கு பேரும் பருத்தித் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, மீனவர்கள் 4 பேரும் வருகிற 4-ந்தேதி வரை யாழ்பாணம் சிறையில் நீதிமன்ற காவலில் வைப்பதற்கு உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu fishemans custody extension in srilanga


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->