பயங்கர தாக்குதல்!!! சூடான் நாட்டில் போர் தீவிரம்.....
Terrible Attack War intensifies in Sudan 200 people dies in civilwar
சூடான் நாட்டில் கர்த்தூம் மாநிலத்தில் போர் அதிபயங்கரமாக நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு எதிராகத் துணை ராணுவம் தீவிரமாகப் போரில் ஈடுபட்டு வருகிறது. இந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள் ராணுவ வீரர்கள் உட்பட ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர்ப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ராணுவப் படை:
இதைத்தொடர்ந்து சூடானின் தெற்கு பகுதியில் அல் - கடாரீஸ் மற்றும் அல் - கேல்லாவட் கிராமத்தில் துணை ராணுவப் படையினர்ப் பதுங்கி இருந்து செயல்படுவதாக அந்நாட்டின் ராணுவத்தினருக்குத் தகவல் ஒன்று கிடைத்தது. இதனால் ராணுவத்தினர் அங்கு உடனே களம் இறக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து குண்டுகள் மற்றும் ராக்கெட்களை எய்தும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தப் பயங்கர தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக நீடித்து வரும் இந்தத் தாக்குதலில், இதுவரை 200 பேர்க் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
English Summary
Terrible Attack War intensifies in Sudan 200 people dies in civilwar